குற்ற நடவடிக்கை இல்லாத மாநகராக சென்னை உருவாக்கப்படும் !

38

குற்ற நடவடிக்கை இல்லாத மாநகராக சென்னை உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

மத்திய சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். திருவான்மியூரில் அதிமுகவின் சாதனைகளை பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரித்த அவர், 79 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி செயல்படுத்தப்படும் என்றும், குற்ற நடவடிக்கை இல்லாத மாநகரமாக சென்னையை உருவாக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். மேலும், இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் சிறப்பு நிதி திட்டம் தேர்தலுக்கு பிறகு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ஆட்சியில் இல்லாதபோதே அராஜகத்தில் ஈடுபடும் திமுக, ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், அதன் அதிகாரம் அதிகரித்து காணப்படும் என குற்றம் சாட்டினார். எனவே, மக்கள் மீது அக்கறை செலுத்தி வரும் அதிமுக-பா.ஜ.க.வுக்கே ஆதரவளிக்க வேண்டும் எனவும் அப்போது அவர் கேட்டு கொண்டார்.