2014-ல் தேர்தல் ஆணையத்தின் உதவியால்தான் அதிமுக வெற்றி !!

59

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக மத்திய சென்னையின் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தயாநிதிமாறன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தேர்தல் ஆணையம் உதவி செய்ததால்தான் அதிமுக 37 இடங்களை கைப்பற்ற முடிந்தது என்றும், இதனால், தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் விளக்கமளித்தார். சட்டமன்ற இடைத் தேர்தலில், தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று, அதிமுக-வின் அராஜக ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என்றும் தயாநிதிமாறன் கேட்டுக் கொண்டார்.