நீச்சல் குளத்தின் நீரில் சிக்கி மாணவன், காவலாளி உயிரிழப்பு

82

கோவை மாவட்டத்தில் நீச்சல் குளத்தில் குளித்த மாணவனும், காப்பாற்ற சென்ற காவலாளியும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான நீச்சல் குளம் ஒன்று இயங்கி வருகிறது. இன்று 11-ம் வகுப்பு மாணவர்கள் 5 பேர் நீச்சல் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.அப்போது, அன்புசெல்வன் என்ற மாணவன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். நீச்சல் தெரியாத மாணவன் தண்ணீரில் தத்தளித்ததைக் கண்ட காவலாளி மாணவனை காப்பாற்ற சென்றுள்ளார். இந்நிலையில், ஆழம் அதிகமாக இருந்ததால் 2 பேரும் நீரின் அடியில் சிக்கி பரிதாமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.