2ஆவது ஐபிஎல் 20ஓவர் கிரிக்கெட் போட்டி | மார்ச் 31அன்று சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதல்

67

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை ரசிர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

பன்னிரண்டாவது ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. அந்தப் போட்டியில் பெங்களூர் அணியைச் சென்னை அணி எளிதாக வென்றது. ஐபிஎல் போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், சென்னை மைதானத்தில் இரண்டாவது போட்டி மார்ச் 31அன்று சென்னை, ராஜஸ்தான் அணிகள் இடையே நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலையில் தொடங்கியது. ரசிகர்கள் நீண்டவரிசையில் காத்துநின்று டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ஆயிரத்து முந்நூறு ரூபாய் ஆகும். இரண்டாயிரத்து ஐந்நூறு, ஐயாயிரம், ஆறாயிரத்து ஐந்நூறு ரூபாய்களிலும் டிக்கெட் விற்கப்பட்டது.