காங்கிரசின் திட்டம் குறித்து விமர்சனம் : நிதி அயோக் துணை தலைவர் ராஜிவ் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

64

காங்கிரசின் திட்டம் குறித்து விமர்சனம் செய்த நிதி அயோக் துணை தலைவர் ராஜிவ் குமாருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக, பா.ஜ.க,வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கவர்ச்சிகரமான அறிவிப்பை, காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. ஐந்து கோடி ஏழை குடும்பங்களுக்கு, மாதம் ஆறாயிரம் ரூபாய் என ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார். இதன் மூலம், நாடு முழுவதும், 25 கோடி பேர் பயனடைவர் என்றும், அவர் குறிப்பிட்டார். காங்கிரசின் திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த நிதி அயோக் துணை தலைவர் ராஜிவ் குமார், இந்த திட்டத்தை அமல்படுத்த முடியாது என்றும், நிதிப்பற்றாக்குறை ஏற்படுத்தும் எனவும் கருத்து கூறியிருந்தார். ராஜிவ் குமாரின் இந்த கருத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியது எனக்கூறியுள்ள தேர்தல் ஆணையம், இது குறித்து 2 நாளில் பதில் அளிக்க வேண்டும் என நிதி அயோக் துணைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.