தலைமை காவலரின் மனைவியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற நபர் கைது..!

55

சென்னை வேளச்சேரியில் தலைமை காவலரின் மனைவியை பின் தொடர்ந்து தகாத முறையில் நடக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேளச்சேரி நேருநகரை சேர்ந்த ஆறுமுகம், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தலைமைக் காவலர் ஒருவரின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றார் என்று கூறப்படுகிறது. காவலரின் மனைவி கூச்சலிடவே பொது மக்கள் பிடித்து அடித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஆறுமுகம் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் அவர் கடந்த ஒரு வார காலமாகவே தலைமை காவலர் மனைவியை தவறான நோக்கத்துடன் பின் தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆறுமுகம் மீது ஏற்கனவே சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.