சென்னை விமான நிலையத்தில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்..!

45

விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள், வெளிநாட்டு கரண்சிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில், கோலாலம்பூர் மற்றும் கொழும்பில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.moniy

இதேபோல், மஸ்கட் மற்றும் துபாய்க்கு கடத்த முயன்ற 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரியால் மற்றும் திணார் போன்ற வெளிநாட்டு கரண்சி சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய சென்னை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.