சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 85,000 ரூபாய் மோசடி..!

57

சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட வாலிபரையும், உடந்தையாக இருந்த விமான நிலைய ஆணைய அதிகாரியையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த சக்தி கண்ணன், சென்னை விமான நிலையத்தில், வேலைவாய்ப்பு இருப்பதாக இணையதளத்தில் வந்த விளம்பரத்தை நம்பி, 85 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்களது வங்கி கணக்கில் கட்டியுள்ளார். பணம் கை மாறியதும் இணையதளத்தை மோசடி கும்பல் உடனடியாக துண்டி விட்டதால், அவர் அதிர்ச்சியடைந்தார். மோசடி புகாரின் பேரில் மீனம்பாக்கம் விமான நிலைய காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தியதில், சென்னை பட்டாபிராமை சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி ரப்பர் ஸ்டாம்புகள், லெட்டர் பேடுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டன. chennai

இதேபோல், மோசடிக்கு உடந்தையாக இருந்த தென் மண்டல விமான நிலைய ஆணைய அலுவலகத்தில் பணிபுரியும், அதிகாரி சுரேந்திரபாபுவையும் போலீசார் கைது செய்தனர். இரண்டு பேர் மீதும் 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்