பிரதமர் மோடி என்ன செய்தாலும், தெலுங்கு தேச அரசு பயப்படாது – சந்திரபாபு நாயுடு

65

பிரதமர் மோடி என்ன செய்தாலும், தெலுங்கு தேச அரசு பயப்படாது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, வரக்கூடிய தேர்தல் தொடர்பாக தாம் தினமும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார். ஆந்திர மாநில வளர்ச்சிக்காக பிரதமர் மோடியிடம் 18 கோரிக்கைகள் முன் வைத்ததாகவும், அதில் ஒன்றைக்கூட மோடி நிறைவேற்றவில்லை என சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

மாநில உரிமைக்காக அமைதியான போராட்டத்தை நடத்தினால் மோடி அரசு அடக்குமுறைகளை கொண்டு போராட்டத்தை கையாள்கிறது என அவர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தாலும் அதற்கெல்லாம் தெலுங்கு தேசம் அரசு பயப்படாது என கூறினார். மேலும், வரக்கூடிய தேர்தல்களில் தெலுங்கு தேச கட்சியை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என சந்திர பாபு நாயுடு வலியுறுத்தினார்.