தெலங்கானா மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை !

57

தெலங்கானா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆந்திராவும் தெலங்கானாவும் தனித்தனி மாநிலங்களாக கடந்த 2014ஆம் ஆண்டு பிரிந்தன. இதையடுத்து தெலங்கானாவில் பிரதான கட்சியாக இருக்கும் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்த்ரிய சமிதி கட்சியில் தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சேரத் தொடங்கினர்.

கடந்த ஆண்டு நடந்த தெலங்கானா பேரவை தேர்தலில் காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட்ட தெலுங்குதேசம் 2 இடங்களில் மட்டுமே வென்றது. இதையடுத்து தற்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என தெலுங்கு தேசம் கட்சி முடிவு எடுத்துள்ளது. இது தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான முடிவு என அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.