ஆந்திரா வருவது ஏன்? – பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கேள்வி

110

வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆந்திராவுக்கு வருகை தருவது ஏன்? என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு எழுதியுள்ள கடிதத்தில், 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து, ஆந்திராவுக்கு வழங்கிய ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை என்று தெரிவித்துள்ளார். 29 முறை டெல்லியில் சந்தித்து மனு அளித்தும், ஆந்திர மக்களின் கோரிக்கை தொடர்பாக, இதுவரை எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். விசாகப்பட்டினத்திற்கு வரும் போது, ஆந்திராவில் வசிக்கும் 5 கோடி மக்களின் கோபத்தினை பிரதிபலிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள அவர்,

ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆந்திரா வருவதற்கு வெட்கமாக இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்களுடன் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வரும் போது, கருப்புச்சட்டை அணிந்து எதிர்ப்பை காட்டுவோம் என்றும் தனது கடிதத்தில் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.