ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் – சந்திரபாபு நாயுடு

53

ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் தெலுங்கு தேசக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துச் சந்திரபாபு நாயுடு பிரச்சாரம் செய்தார். அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் வன்முறையாளர் எனத் தெரிவித்தார். ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் முடங்கிவிடும் என்றும் தெரிவித்தார். குற்றச்செயல்களில் கைதேர்ந்தவர் ஜெகன்மோகன் ரெட்டி என்றும், அவர் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.