முதலமைச்சர் படம் ஒட்டப்பட்டு தேர்தல் விதி மீறப்பட்டதாக அமமுக குற்றச்சாட்டு

68

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி படம் ஒட்டப்பட்டு தேர்தல் விதி மீறப்பட்டிருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குற்றஞ்சாட்டியுள்ளது. நெல்லையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட நிர்வாகம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் புகார் கூறினார்.