ஆல்கஹால் கழிவை அருந்திய பொதுமக்கள் | 4 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

73

விசாகபட்டினம் அருகே தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த ஆல்கஹால் கழிவை குடித்த நான்கு பெண்கள் உட்ப 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள உப்பாரா காலனி மற்றும் பெடகண்டிதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஆல்கஹால் கலக்கப்பட்ட நாசினிகள் பிளாஸ்டிக் பேரல்களில் வைத்திருந்தனர். அப்போது அங்கு வந்த சிலர் ஆல்கஹால் என நினைத்து கழிவு பொருளை அருந்தியுள்ளனர். கழிவை அருந்திய சிறிது நேரத்திலேயே அனைவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

இதனையடுத்து தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 4 பெண்கள் உட்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.